ராணுவ வீரர்கள் கொண்டாடும் ‘அமரன்’ !

Published On:

| By Minnambalam

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து, வருகிற தீபாவளி அன்று(அக்.31) வெளியாகவுள்ள திரைப்படம் ‘அமரன்’.

இந்தத் திரைப்படம் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நேற்று(அக்.24) டெல்லியில் திரையிடப்பட்டது. அந்தப் படத்தைக் கண்ட ராணுவ வீரர்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளனர். இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

மறைந்த இந்திய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ‘அமரன்’ . இந்தப் படத்தின் காட்சிகள், ‘இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ்’ என்கிற புத்தகத்தின் அடிப்படையில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன், அவரது மனைவி இந்து ரெபெக்கா வர்கீஸாக சாய்பல்லவி நடித்துள்ளனர்.

மேலும், இந்தப் படத்தில் புவன் அரோரா, ராஹுல் போஸ், ஸ்ரீகுமார், லல்லு, ஷியாம் மோகன், அஜய் நாக ராமன், மிர் சல்மா, கௌரவ் வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

ஜீவி.பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சி.எச்.சாய் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு கலைவாணன் படத்தொகுப்பு வேலைகளை மேற்கொண்டுள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளை ஸ்டீபன் ரிச்சர் படமாக்கியுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வருகிற தீபாவளி ரிலீஸான ஜெயம் ரவியின் ‘பிரதர்’, கவினின் ‘பிளடி பெக்கர்’ ஆகிய திரைப்படங்களுடன் இந்தப் படம் வெளியாகிறது.

-ஷா

ADVERTISEMENT

 

 ’டில்லி வில் ரிடர்ன் சூன்’ – ‘கைதி – 2’ குறித்து லோகேஷ் கனகராஜ்

 

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share