தமிழ்நாடு ஆளுநராக அர்லேகர் நியமனம் : முதல்வர் விஜய் வாழ்த்து!

Published On:

| By Kavi

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (அக்டோபர் 12) வெளியிட்ட உத்தரவில், 

ADVERTISEMENT

கேரள மாநில ஆளுநராகப் பணியாற்றி வந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்  தமிழ்நாட்டின் புதிய ஆளுநராகவும், 

சிக்கிம் மாநில ஆளுநராகப் பணியாற்றி வந்த ஓம் பிரகாஷ் மாத்தூர் கேரள மாநில புதிய ஆளுநராகவும், 

ADVERTISEMENT

பிரஜ் மோகன் ராம் ஒடிசா மாநில ஆளுநராகவும், 

டாக்டர் சுதா யாதவ் கர்நாடக மாநில ஆளுநராகவும், 

ADVERTISEMENT

தால் சிங் பிசேன் உத்தரகாண்ட் மாநில ஆளுநராகவும், 

துஷ்யந்த் கௌதம்  சிக்கிம் மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து பொறப்பு ஆளுநராக அர்லேகர் செயல்பட்டு வந்தார். இந்தநிலையில் அவர் தமிழகத்துக்கான முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், பொறுப்பு ஆளுநராக இருந்த அர்லேகர்தான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்தநிலையில் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்ட அவருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து கூறியுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திரு.ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

தமிழ்நாட்டின் வளர்ச்சி, மாநில உரிமைகள் மற்றும் தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்!” என்று கூறியுள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share