அரவக்குறிச்சி தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

Aravakurichi constituency Pre-Poll Survey 2026

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

அரவக்குறிச்சி வாக்காளர்கள்

ADVERTISEMENT
Aravakurichi constituency Pre-Poll Survey 2026

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

Aravakurichi constituency Pre-Poll Survey 2026
Aravakurichi constituency Pre-Poll Survey 2026

சாதி வாரியான வாக்காளர்கள்

Aravakurichi constituency Pre-Poll Survey 2026

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

Aravakurichi constituency Pre-Poll Survey 2026

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

Aravakurichi constituency Pre-Poll Survey 2026

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

Aravakurichi constituency Pre-Poll Survey 2026

அரவக்குறிச்சி.. ரொம்பவே பெயர் அடிபடுகிற தொகுதிதான். போன 2021 தேர்தலில் பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை போட்டியிட்டு தோல்வி அடைந்த தொகுதி.

அதுக்கு முன்னாடி 2016-ல் அதிமுக வேட்பாளராக இப்ப திமுகவில் இருக்கிற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வென்றிருந்தார். 2019-ல் நடந்த இடைத்தேர்தலிலும் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றிருந்தார். 2021-ல் திமுகவின் மொஞ்சனூர் இளங்கோ வெற்றி பெற்றார்.

இவர் 2006-ல் மதிமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்த மொஞ்சனூர் ராமசாமி மகன்.

இங்கே அதிமுக வேட்பாளராக செல்வக்குமார் போட்டியிடுகிறார்.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக –48 %
அதிமுக –33 %
தவெக-13 %
நாதக- 5% வாக்குகள் பெறும்

அதிமுக வேட்பாளரை விட 15 சதவீதம் வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார் திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? கரூர் | Karur | Minnambalam Mega Survey Results 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share