தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகி, ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பை தொடங்கி உள்ளார்; விரைவில் அரசியல் கட்சி தொடங்கப்படும் என்ற தெரிவித்துள்ள நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், சென்னையில் இன்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அப்போது பேசிய அவர் “இன்று நண்பர்களுக்கு இந்த மேடையில நான் சில விஷயத்தைப் போட்டு உடைக்க விரும்புகின்றேன்.
இன்னைக்கு நிறைய நம்முடைய பிஜேபி நண்பர்களாக இருக்கட்டும், மாற்றுக்கட்சி நண்பர்களாக இருக்கட்டும், ‘அண்ணாமலை என்ன பிஜேபியை விட்டு வரலைங்க? அவரு பிஜேபியினுடைய B-Team-ங்க. அவரு டெல்லி எப்படி போனாரு பாத்தீங்களா? ஜம்முன்னு போனாரு. நாலு நாள் ரிசைன் பண்றேன்னாரு, அமித் ஷாவைப் பார்த்தாரு, எல்லாரையும் பார்த்தாரு. ஆனா சண்டையே போடலையே? சண்டை போட்டாத்தானே அவரு பிஜேபிக்கு எதிரி? சண்டையே போடலையே?’
அவரு மரியாதை நிமித்தமாக எல்லாத்தையும் பார்த்துட்டு, ‘ஐயா, உங்க வேலையில நீங்க போங்க, என் வேலையில நான் போறேன். எனக்கு ஒரு புதுவிதமான அரசியல் எண்ணம் இருக்கு, இதுல செஞ்சுக்கிறேன்.’ என்கிறார்.
அதுவும் பொய்தான்! ‘அமித் ஷா அண்ணாமலையோட காதுல ஏதோ சொல்லி தமிழ்நாட்டுக்கு அனுப்பிச்சிருக்காரு, அதை அண்ணாமலை பக்காவாக தமிழ்நாட்டில் வந்து செய்வதற்காக பிஜேபியினுடைய B-Team.’ என்கிறார்கள். ஆமா, உண்மைதான்!
அமித் ஷா என் காதில் ஒரு விஷயத்தைச் சொன்னார். இத்தனை காலமாக சொல்லல, இந்த மேடையில சொல்றேன்.
அமித் ஷா அவர்கள் என்னை டெல்லிக்கு வரச் சொன்னாரு, டெல்லியில் பொறுப்பெடுக்கச் சொன்னார். மூன்று ஆண்டுகளுக்கு மேல டெல்லியில் வந்து இருக்க வேண்டும் என்று சொன்னபொழுது, ‘நமக்கு அது ஒத்து வராதுங்க ஐயா, நான் தமிழ்நாட்டுல இருந்துக்கிறேன். நமக்கு அது வேண்டாம்ங்க ஐயா. நான் இங்கேயே சின்னதா, பாவமா, இங்கேயே மக்கள் சேவை பண்ணிக்கிட்டு, நம்முடைய நண்பர்களோடு, சகோதர சகோதரிகளோடு இங்கேயே இருந்துக்கிறேன்.’ என்றேன்.
அதிலும் சில நண்பர்கள், ‘அண்ணாமலை அமெரிக்கா போயிருவாரு, டெக்ஸாஸ் போயிருவாரு, கலிபோர்னியா போயிருவாரு.’ என்று பேசுகிறார்கள்.
ஐயா! இந்த கை இங்க குப்பைதான்ங்க ஐயா எடுத்துட்டு இருக்கு, எங்கேயும் போல! டெல்லியே போகாத இந்த அண்ணாமலை எங்க அமெரிக்காவுக்குப் போகப்போறான்?
சரி, நான் சொல்ற சில பிஜேபிக்காரங்களுக்கு நம்பிக்கை இல்லையா? 20-ஆம் தேதி அமித் ஷா தமிழ்நாடு வர்றாரு… ‘ஐயா! அண்ணாமலைக்கு ஏதோ ஆஃபர் கொடுத்தீங்களாமா, அவரு வேண்டாம்னு சொல்லிட்டு வந்தாராமா… என்ன ஆஃபர் கொடுத்தீங்க?’ன்னு அமித் ஷாவைக் கேளுங்க!
எப்பொழுதுமே அரசியலைப் பொறுத்தவரை ஒரு பிரின்சிபிளோட (Principle) மட்டும்தான் நான் அரசியலைச் செய்திருக்கேன்.” என்றார்.
