சுதந்திர தின விழாவில் நடிகை திரிஷா பங்கேற்றது தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
”தமிழக சட்டசபை கதவுகளை முதல்வர் விஜய் மூடினால் அவரது எலும்புகளை உடைப்போம்” என பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியவர் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன். இதற்காக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார் மார்க்கண்டேயன்.
இந்த வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்டசபை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:
கேள்வி: சுதந்திர தின விழாவில் நடிகை திரிஷாவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது பற்றி?
பதில்: இந்த நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்ற வினா எழுப்பப்பட்டிருக்கிறது. தலைமை பொறுப்பில் இருக்கிறவர்கள் வாழ்கிற சந்ததிகளுக்கு முன் உதாரணமாக வாழ வேண்டும்.. இதுதான் என் கருத்து.
கேள்வி: முதல்வர் விஜய் குடும்பம் பற்றி நயினார் நாகேந்திரன் பேசியது குறித்து?
பதில்: நயினார் நாகேந்திரன், தான் நாகரிகமாகத்தான் பேசியதாக சொல்லி இருக்கிறார். சட்டசபைக்குள் நயினார் நாகேந்திரன் நாகரிகமாக பேசி பார்த்திருக்கிறேன். இந்த விஷயங்களில் எல்லாமே யதார்த்தமானவைதான்.
இவ்வாறு திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தெரிவித்தார்.
