தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது முதல்வர் விஜய் அரசு கை வைத்தால் மத்திய அரசு என்ன செய்யும் என்பதை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விவரித்துள்ளார்.
வேலூரில் இன்று ஆகஸ்ட் 16-ந் தேதி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு துரைமுருகன் அளித்த பதில்:
கேள்வி: உதயநிதியை கைது செய்த அரசு, நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? மத்திய அரசுக்கு பயப்படுகிறதா?
பதில்: பத்திரிகையாளர்களின் இந்த குமுறலை முதல்வர் ஜோசப் விஜய்க்கு அர்ப்பணம் செய்கிறேன். தற்போதைய முதல்வர் மத்திய அரசுடன் ஒத்துப்போகிறேன், “பல்லக்கு தூக்குகிறேன்” என்று கூறியுள்ள நிலையில், அவர் எப்படி பா.ஜ.க-வை எதிர்க்க முடியும்?
நயினார் நாகேந்திரன் மீது கை வைத்தால் மத்திய அரசு உடனடியாக இந்த ஆட்சியை ஒரே நாளில் முடிவுக்குக் கொண்டு வந்துவிடும்.
கேள்வி: சட்டம் ஒழுங்கு பற்றி?
பதில்: தற்போதைய பத்திரிகைகளைப் புரட்டினால், ஒரு பக்கத்திற்கு நாலு கொலை, நாலு பாலியல் பலாத்காரச் செய்திகள் எனச் செய்திகள் நிரம்பி வழிகின்றன. இந்த நாட்டில் சட்ட ஒழுங்கு என்ன நிலையில் இருக்கிறது என்பதை இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம்.
முதலமைச்சர் சட்டம் ஒழுங்கைக் கவனிக்கும்போது 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது எப்போதும் விழிப்புடன் இருப்பார். ஆனால், தற்போதைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது.
கேள்வி: விஜய் ஆட்சியின் 100 நாள் ஆட்சி?
பதில்: 100 நாளில் இதை சாதித்தோம்.. என்று எதையாவது ஒன்றை சொல்ல சொல்லுங்கள்.. 100 நாளில் இமாலய அளவுக்கு சாதனை செய்ய முடியாது. குன்று அளவுக்காவது செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. இவ்வாறு துரைமுருகன் கூறினார்.
