முதல்வர் குறித்து பேச்சு : அனிதா ராதாகிருஷ்ணன் முன் ஜாமீன் கேட்டு மனு!

Published On:

| By Kavi

முதல்வர் குறித்து பேசிய விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஜூன் 20ஆம் தேதி திருச்செந்தூரில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வரை ஒருமையில் விமர்சித்து பேசியிருந்தார்.

ADVERTISEMENT

இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலையத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தவெக நகரச் செயலாளர் செல்​வம் புகார் அளித்தார்.

இந்த புகாரைத் தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், ஆளுங்கட்சியின் நடவடிக்கைகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு குறித்து  எதிர்க்கட்சி எம்எல்ஏ என்ற முறையில் பேசினேன். அரசியல் உள் நோக்கத்துடன் எனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். 

ADVERTISEMENT

விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரவுள்ளது. 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share