அந்தமான் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா?

Published On:

| By Pandeeswari Gurusamy

Low-Pressure Area

வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் ஆந்திராவில் கரையைக் கடந்த நிலையில், தெற்கு அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது.

ADVERTISEMENT

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான்-நிகோபார் தீவுகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகத் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை 5:30 மணியளவில் உருவாகியுள்ளது. இது வலுப்பெற்று நகரும் திசையைப் பொறுத்தே தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு தீர்மானிக்கப்படும்.

ADVERTISEMENT

இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்றுத் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் பட்சத்தில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share