திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை கைது செய்துள்ள Circus ஆட்சியாளர்களை கண்டிக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர் சகோதரர் அன்பில் மகேஷை கைது செய்துள்ள இந்த Circus ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
திரும்பிய திசையெல்லாம் தறிகெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் – விலைவாசி உயர்வு – த.வெ.க.வினரின் அட்டூழியங்கள் என இந்த கோமாளி அரசின் தோல்விகளை மறைக்கவும் – திசைத்திருப்பவுமே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார் டம்மி CM.
சகோதரர் அன்பில் மகேஸ் இந்தச்சூழலை சட்டப்படி எதிர்கொண்டு மீண்டு வருவார். வழக்கினாலும் – கைது நடவடிக்கைகளாலும் கழக உடன்பிறப்புகளை ஒரு போதும் அடக்க முடியாது. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
அரசியல் பழிவாங்கும் நோக்கில் கைது- கனிமொழி
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி எம்.பி, “முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அரசியல் பழிவாங்கும் நோக்கில் கைது செய்திருக்கிறது தவெக அரசு. தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகளை திசைத்திருப்ப இத்தகைய அடுக்கமுறைகளில் தவெக அரசு இறங்கியிருக்கிறது. இவற்றை சட்ட ரீதியாக தி.மு.கழகம் எதிர்கொள்ளும்” என தெரிவித்துள்ளார்.
