வைஃபை ஆன் செய்ததும், “நம்பினோர் நட்டாற்றில் கை விட்டாலும்”ன்னு பிரசங்க வரிகளை படித்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. இன்னைக்கு வேற டோனில் இறங்கிட்டீங்க..
ஆமாங்க ப்ரோ.. தேவாலயத்தை கிராஸ் செய்தேனா.. அதே டோனில் வந்துட்டேன்.. நாம சொல்லிகிட்டிருந்தபடியே அன்பில் மகேஷை கைது செஞ்சுட்டாங்களே ப்ரோ..
யெஸ் ப்ரோ.. அன்பில் மகேஷ் கைது சம்பவத்துல என்னவெல்லாம் நடந்துச்சு?
இந்த கேஸில பிடி அரசகுமார் கைது செய்யப்பட்டப்பவே நாம அன்பில் மகேஷுக்கு குறிவெச்சுட்டாங்கன்னு சொல்லி இருந்தோம்.. அதுக்கு பிறகும் இந்த கேஸில் என்ன டெவலப் நடந்துகிட்டு இருக்கு? யார் யார் என்ன என்ன வாக்குமூலங்கள் கொடுத்தாங்க?-ன்னு விலாவாரியாக சொல்லி அன்பில் மகேஷ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவாருன்னும் சொல்லி இருந்தோம்..
போனமுறையும் கூட, சிஎம் விஜய் தரப்புகிட்ட அன்பில் மகேஷ் மனைவி ஜனனி பேச்சுவார்த்தை நடத்துறாங்க..அப்ப, கோர்ட் ஆர்டர் என்னவோ அதன்படி செய்வோம்னு மட்டும்தான் சிஎம் விஜய் சைடுல இருந்து ரிப்ளை போனதுன்னும் நாம பேசியிருந்தோம்.. அதோட, முன்ஜாமீன் மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டால் அன்பில் மகேஷ் கைது செய்யப்படுவாருன்”னும் நாம சொல்லி இருந்தோம்.
இன்னைக்கு அன்பில் மகேஷ் முன்ஜாமீன் மனுவை கோர்ட் டிஸ்மிஸ் பண்ணிடுச்சு.. அடுத்த ”சில மணிநேரங்களிலேயே” சென்னை அமைந்தகரையில் வைத்து அவரை கைது செஞ்சுருச்சு சென்னை போலீஸ்..
இதை பத்தி நாம விசாரிச்சப்ப, “அன்பில் மகேஷ் முன்ஜாமீன் மனுவை ஹைகோர்ட் டிஸ்மிஸ் செஞ்சுடும்னு உளவுத் துறை நேற்றே ரிப்போர்ட் கொடுத்திருந்தது.. இந்த ரிப்போர்ட் அடிப்படையில, கோர்ட் ஆர்டர் வந்த உடனே அன்பில் மகேஷை கைது செய்யுறதுக்கு ஒரு டீம் ஃபார்ம் பண்ணி இருந்தார் சிட்டி கமிஷனர் அமல்ராஜ்.. இதை பத்தி சிஎம் விஜய்க்கும் நேற்றே தகவல் கொடுத்துட்டார் கமிஷனர்.. ஆனா சிஎம் சைடுல இருந்து உடனே எந்த பதிலும் வரலை..
இன்னைக்கு அன்பில் மகேஷ் முன்ஜாமீன் மனு டிஸ்மிஸ் ஆனது.. அப்பவும் அன்பில் மகேஷ் தரப்புல, “நாங்க சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் முன்ஜாமீன் வாங்கிடுவோம்.. அது வரைக்கும் வெயிட் பண்ணுங்க”ன்னு சிஎம் தரப்புகிட்ட பேசிப் பார்த்தாங்க.. ஆனால் சிஎம் விஜய் சைடுல இருந்து ரியாக்ஷன் எதுவும் அவங்களுக்கு கிடைக்கலை..
சிஎம் விஜய், அட்வைசர்ஸுடன் இதை பத்தி சீரியசா டிஸ்கஷன் செஞ்சார்..
இந்த டிஸ்கஷனில, “இப்போதைக்கு நம்ம ஆட்சிக்கு எதிராக திமுக ரொம்ப சீரியசா இறங்கி இருக்கு.. அக்டோபர் 31-ந் தேதி திமுக மகளிரணி போராட்டமும் அறிவிச்சிருக்காங்க.. ரவுடிகள் கொலை, சிறுமிகள் மாயம்னு ஒவ்வொரு விஷயத்துலேயும் திமுக ரொம்ப ஆக்டிவ்வா இருக்குது.. இதை டைவர்ட் பண்ண வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கு.. இப்ப நமக்கு இருக்கிற நல்ல ஆப்ஷன் அன்பில் மகேஷ் கேஸ்தான்.. அவரு சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் முன்ஜாமீன் வாங்குற வரைக்கும் நாம ஏன் வெயிட் பண்ணனும்? அன்பில் மகேஷை அரெஸ்ட் செஞ்சுட்டா திமுகவோட கவனம் அந்த பக்கம் டைவர்ட் ஆகிடும்தானே?”ன்னு அட்வைசர்ஸ் சொன்னாங்க.. இதை எல்லாம் சிஎம் விஜய் சீரியசா கவனிச்சுகிட்டு இருந்தார்.. அதுக்கு அப்புறம்தான்.. சரி ”ஆக்ஷன் எடுப்போம்”ன்னு முடிவெடுத்தார்..
இந்த தகவல் சிட்டி போலீஸ் கமிஷனர் அமல்ராஜூக்கும் பாஸ் ஆனது.. அவங்கதான் ஏற்கனவே ரெடியா இருந்ததால சட்டென அன்பில் மகேஷ் கைது ‘சம்பவத்தை’ நடத்தி முடிச்சுட்டாங்க”ன்னு சொல்றாங்க ப்ரோன்னு டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆஃப்.
