“பழி வாங்கும் நடவடிக்கை” : அன்பில் மகேஷ் கைது குறித்து துரைமுருகன்

Published On:

| By Kavi

எங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று அன்பில் மகேஷ் கைது விவகாரம் தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். 

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

இன்று காலையில் அவருக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் பிற்பகலில் அமைந்தகரையில் வைத்து போலீசார் கைது செய்தனர். 

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வருகின்றன. 

ADVERTISEMENT

தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். 

இந்த நிலையில் அன்பில் மகேஷ் கைது தொடர்பாக வேலூர் காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துரைமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

ADVERTISEMENT

இதற்கு அவர், “ஆளும் கட்சி எதிர்க்கட்சியை பழி வாங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் இது நடக்கிறது. சில வழக்குகளை போடுகிறார்கள். எங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. இதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம்” என்று கூறினார்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share