முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 100 கோடி பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி லட்சுமி நாராயணன், அன்பில் மகேஷ் மனுவை தள்ளுபடி செய்தார்.
இன்று காலை உத்தரவு வந்த நிலையில் தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அமைந்தகரையில் வைத்து அவரை போலீசார் கைது செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
