முன் ஜாமின் மறுப்பு : அன்பில் மகேஷ் வழக்கில் உத்தரவு!

Published On:

| By Kavi

அன்பில் மகேஷுக்கு முன் ஜாமின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பிடி அரசகுமார் கைது செய்யப்பட்டார். 

ADVERTISEMENT

இந்த வழக்கில் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீதும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் முன் ஜாமின் கேட்டு அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுவை நீதிபதி லட்சுமி நாராயணன் விசாரித்தார்.

ADVERTISEMENT

அன்பில் மகேஷ் வழக்கின் கேஸ் டைரியை படித்துப் பார்த்துவிட்டு, வருகிற அக்டோபர் 26ஆம் தேதி அன்று இந்த மனு மீது முடிவை அறிவிக்கிறேன் என்று கூறி உத்தரவை ஒத்திவைத்திருந்தார்.

இதற்கிடையே கடந்த அக்டோபர் 21ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர்.

ADVERTISEMENT

அதில், ” இந்த வழக்கின் இரண்டாவது குற்றம் சாட்டப்பட்ட நபரான முத்துக்குமார் உறவினர்கள் அன்பில் மகேஷை  அணுகியுள்ளனர். அவர்களிடம் முத்துக்குமார் தகுந்த நேரத்தில் திரும்பி வருவார், பாதுகாப்பாக இருக்கிறார் என்று அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார். அன்பில் மகேஷுக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது. கட்சி நிதி என்ற பெயரில் லஞ்ச பணம் அன்பில் மகேஷிடம் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இன்று (அக்டோபர் 26) தீர்ப்பு வழங்கிய நீதிபதி லட்சுமி நாராயணன், அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு முன் ஜாமின் வழங்க மறுத்துவிட்டார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share