மறுசீரமைப்பால் தொகுதிகள் குறையுமா? – ஸ்டாலின் மீது அமித் ஷா கடும் விமர்சனம்!

Published On:

| By christopher

amit shah attack mkstalin at kovai

”மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பால், தமிழ்நாட்டில் தொகுதிகள் குறையும் என தமிழக முதலமைச்சர் கூறுவது பொய்” என ஸ்டாலினை விமர்சித்துள்ளார் அமித் ஷா. amit shah attack mkstalin at kovai

தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்.

அப்போது, “தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் 39 இல் இருந்து 31 ஆகக் குறைக்கப்படும். 8 தொகுதிகளை இழக்க வேண்டியிருக்கும். இது குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை செம்மையாக பின்பற்றியதற்காக தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கொடுக்கும் தண்டனை. இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்க வரும் மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளேன்” என தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று கோவையில் பாஜகவின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.

எந்த தொகுதியும் குறைக்கப்படாது! amit shah attack mkstalin at kovai

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “சில நேரங்களில் சமூகத்தில் உள்ள அனைத்து ஊழல்வாதிகளையும் உறுப்பினர் சேர்க்கை மூலம் கட்சியில் சேர திமுக அனுமதித்தது போல் தெரிகிறது. முதல்வர் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் உண்மையான பிரச்சினைகளிலிருந்து விலகிச் செல்ல பல பிரச்சினைகளை எழுப்புகிறார்கள்.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அவர்கள் ஒரு கூட்டத்தை நடத்தப் போவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பால், தொகுதிகள் குறையும் என தமிழக முதலமைச்சர் கூறுவது பொய்.

ஆனால் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகும், தென் மாநிலங்களின் எந்த தொகுதியும் குறைக்கப்படாது என்று பிரதமர் மோடி ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளார்” என்று அமித் ஷா பேசினார்.

தேச விரோத திமுகவை அகற்றுவோம்! amit shah attack mkstalin at kovai

மேலும் அவர் பேசுகையில், “2024 பாஜகவுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டாகும். 2024 இல் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நீண்ட காலத்திற்குப் பிறகு, ஆந்திராவில் நாங்கள் ஒரு அரசாங்கத்தை அமைத்தோம். டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் வெற்றி பெறுவது மக்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் ஒரு அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் 2026 ஆம் ஆண்டை முடிப்போம்.

தேச விரோத திமுகவை தமிழ்நாட்டிலிருந்து அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. 2026 இல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைக்கப்படும். புதிய அரசாங்கம் இங்கே ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கும். குடும்ப அரசியலையும் ஊழலையும் முடிவுக்குக் கொண்டுவருவோம். தேச விரோத நடவடிக்கைகளை மாநிலத்திலிருந்து வேரறுப்போம்.

எப்போதும் மோடி மீது குற்றச்சாட்டு! amit shah attack mkstalin at kovai

ஐக்கிய முற்போக்கு கூட்டணி காலத்தில் தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்கப்பட்டது. பிரதமர் மோடி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக கோடிக்கணக்கான பணத்தை வழங்கியுள்ளார். ஆனால், பிரதமர் மோடி தமிழ்நாட்டை புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் எப்போதும் குற்றம் சாட்டுகிறார். அதில் எந்த உண்மையும் இல்லை, நான் புள்ளிவிவரங்களுடன் வந்துள்ளேன்.

யுபிஏ அரசாங்கம் 2004 முதல் 2014 வரை மாநிலத்திற்கு மானிய உதவி மற்றும் அதிகாரப் பகிர்வு வடிவில் ரூ. 1,52,901 கோடியை வழங்கியது, அதே நேரத்தில் மோடி அரசாங்கம் கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 5,08,337 கோடியை வழங்கியது. அதோடு, மோடி அரசு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.1,43,000 கோடியை வழங்கியுள்ளது.

நீங்கள் உண்மையுள்ளவராக இருந்தால், எனது விளக்கத்திற்கு மாநில மக்கள் முன் பதிலளிக்க வேண்டும்” என மத்திய அமைச்சர் அமித் ஷா பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share