தமிழ்நாட்டில் அனைத்து கல்வி நிறுவனங்கள், பொது நிகழ்வுகளில் தமிழ்த் தாய் வாழ்த்துதான் முதலில் பாட வேண்டும் என்ற முதல்வர் விஜய் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானம் சட்டசபையில் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட் 10), “தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏகமனதாக தீர்மானத்தை முன்மொழிகிறேன். இந்த தீர்மானத்தை அனைவரும் நிறைவேற்றித் தர வேண்டும்” என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.
இந்த தீர்மானத்துக்கு சட்டசபையில் திமுக, அதிமுக, விசிக, இடதுசாரிகள், முஸ்லிம் லீக், பாமக என அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
இதனையடுத்து முதல்வர் விஜய் கொண்டு வந்த இந்த தனித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
