சருமப் பிரச்சனை நீங்கி முகம் பொலிவா மாறணுமா?.. இதை டிரை பண்ணுங்க!

Published On:

| By Santhosh Raj Saravanan

Aloevera honey face mask to remove skin problems and make glow face

கோடையில் சருமப் பிரச்சனைகளை (Skin Problem) நீக்கி பொலிவாக மாற்ற கற்றாழை, தேன், மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்கை முயற்சி செய்து பார்க்கலாம்.

வாழ்க்கை முறை மாறுபாடுகள், மாசுபாடு, சூரிய ஒளி, தூசி உள்ளிட்டவை காரணமாக பலரும் சருமப் பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக முகப்பரு, கரும்புள்ளிகள், கருமை மற்றும் வறட்சி போன்ற பிரச்சனைகள் பொதுவாக ஏற்படுகின்றன.

ADVERTISEMENT

குறிப்பாக தற்போது கோடைக் காலத்தில் சருமம் விரைவாகக் கருமையாகி, சிவப்புப் புள்ளிகள் தோன்றி, முகத்தின் பொலிவு குறைந்துவிடுகிறது. சருமத்தை பாதுகாக்க விலை உயர்ந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகிறோம். ஆனால், அதனால் சருமம் பாதிப்புக்குள்ளாகவும் வாய்ப்புகள் உள்ளது. சில இயற்கைப் பொருட்களைக் (Homemade Beauty Tips) கொண்டு வீட்டிலேயே அழகான, பொலிவான சருமத்தைப் பெறலாம்.

கற்றாழை, தேன் மற்றும் மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்

குறிப்பாக கற்றாழை, தேன் மற்றும் மஞ்சள் கலந்து முகத்திற்கு மசாஜ் செய்வதன் மூலம் சருமத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இந்த பேஸ்ட்டை வாரத்திற்கு (Aloe Vera Honey and Turmeric Face Mask) இரண்டு முறை, குறிப்பாக இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு ஐந்து நிமிடங்கள் முகத்தில் மென்மையாக மசாஜ் செய்யலாம். இப்படி தொடர்ந்து செய்துவரை ஒரு மாதத்தில் முகத்தில் மாற்றம் தெரிவதைக் காண முடியும்.

ADVERTISEMENT
கற்றாழையின் சரும நன்மைகள்

கற்றாழை ஜெல்லில் சுமார் 99 சதவீதம் நீர் உள்ளது. இது சருமத்தை குளிர்ச்சியாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. கோடைக்காலத்தில் சூரிய ஒளியால் ஏற்படும் கருமை மற்றும் சிவப்புப் புள்ளிகள் போன்ற பிரச்சனைகளைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர, கற்றாழை முகப்பரு தழும்புகளையும் (Skin benefits of aloe vera) படிப்படியாகக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் வைட்டமின்கள் ஏ, பி, சி, துத்தநாகம் மற்றும் பல தாதுக்கள் உள்ளன. அவை சருமத்திற்கு இயற்கையான பொலிவைத் தருகின்றன.

தேன், மஞ்சள் சருமத்திற்கு அருமருந்து

மஞ்சள் மற்றும் தேன் ஆகிய இரண்டிலும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. மஞ்சள், சருமத்தில் ஏற்படும் அழற்சி, முகப்பரு மற்றும் தொற்றுகளைக் குறைக்க உதவிபுரிகிறது. தேன் சருமத்தை (Honey and Turmeric Benefits) ஆழமாகச் சுத்தம் செய்து, அழுக்குகளை நீக்குகிறது. இது சருமத்தில் உள்ள பொலிவின்மையைக் குறைத்து இயற்கையான பொலிவைத் தருகிறது. கற்றாழை, தேன், மஞ்சளை ஒன்றாகக் கலக்கும்போது, ​​அது ஒரு இயற்கையான ஃபேஸ் பேக்காக மாறுகிறது. இது சருமத்திற்கு ஊட்டமளித்து, முகத்தை மென்மையாகவும் பொலிவாகவும் மாற்றுகிறது.

ADVERTISEMENT

கற்றாழை, தேன், மஞ்சள் பேஸ்ட்டை இரண்டு வாரங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் சருமக் கறைகள் குறைந்து, சருமம் இறுக்கமாகி, இளமையான (Glowing Skin) தோற்றத்தைப் பெறுவீர்கள். வீட்டிலேயே கிடைக்கும் இந்த மூன்று பொருட்களைக் கொண்டு, விலையுயர்ந்த அழகு சிகிச்சைகள் தேவையின்றி அழகான சருமத்தைப் பெறலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share