முடி உதிர்வுக்கு நாம் நினைத்துப் பார்க்காத சில காரணங்களும் இருக்கும். அவற்றையும் கண்டறிந்து கவனம் கொடுக்க வேண்டும் (Hair Fall Control).
தற்போதைய காலகட்டத்தில் முடி உதிர்தல் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. ஒரு காலத்தில் வயதாவதால்தான் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்பட்டது. ஆனால், தற்போது இளம் வயதினரும் முடி உதிர்தல், முடி மெலிதல் மற்றும் வறட்சி, பொடுகு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். தவறான வாழ்க்கை முறை, மன அழுத்தம், தூக்கமின்மை, மோசமான உணவுப் பழக்கங்கள் மற்றும் போதிய முடி பராமரிப்பு இல்லாமை (hair fall Reasons) உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது. முடி உதிர்வை சரி செய்ய மக்கள் பெரும்பாலும் விலை உயர்ந்த முடி பராமரிப்பு பொருட்களை வாங்குகிறார்கள். ஆனால் தங்கள் முடியை தொடர்ந்து சேதப்படுத்தும் சிறிய தவறுகளை கவனிக்க மறுக்கிறார்கள்.
எண்ணெய் தடவுவது அல்லது நல்ல ஷாம்பூவைப் பயன்படுத்துவது மட்டும் தலைமுடியை வலுவாக வைத்திருக்கப் போதுமானது அல்ல. முடியின் வேர்களுக்கு முறையான ஊட்டச்சத்தும் (Nutrition) பராமரிப்பும் தேவைப்படுகிறது. சில தவறான பழக்கங்களை உரிய நேரத்தில் மாற்றாவிட்டால், அவை முடி உதிர்தலை அதிகரிக்க செய்கிறது.
அடிக்கடி தலைமுடியை அலசுதல்
தினமும் தலைமுடியைக் கழுவுதல் அல்லது அடிக்கடி தலை குளித்தால் முடி சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், அதிகப்படியான ஷாம்பு பயன்படுத்துவது முடியின் இயற்கையான ஈரப்பதத்தை நீக்கி அதை வறண்டதாகவும் உடையக்கூடியதாகவும் எளிதில் முறியக்கூடியதாகவும் மாற்றிவிடுகிறது. உங்கள் தலைமுடியின் வலிமைக்கு ஏற்ப தலைகுளித்தல் வழக்கத்தை (Frequent hair wash) அமைத்துக் கொள்வது சிறந்தது.
ஈரமான முடியை சீவுதல்
குளித்த உடனேயே ஈரமான முடியை சீவும் பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால், ஈரமான முடி மிகவும் மென்மையானது மற்றும் எளிதில் உடைந்துவிடும் தன்மை கொண்டது. உங்கள் முடியை (Combing wet hair) சிறிது உலர விட்டு, பின்னர் அகன்ற பற்களைக் கொண்ட சீப்பைக் கொண்டு மெதுவாகச் சிக்கல்களை நீக்கவும். இப்படி செய்தால் முடி உதிர்வை கட்டுப்படுத்த முடியும்.
முடி அலங்காரக் கருவிகள் பயன்படுத்துதல்
ஸ்ட்ரெய்ட்னர்கள், கர்லர்கள் மற்றும் ட்ரையர்கள் போன்ற வெப்பம் தரும் கருவிகளால் விரும்பிய தலைமுடி (hair straighteners) தோற்றத்தை உருவாக்க முடியும். ஆனால் அவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது முடியின் தரத்தைப் பாதிக்கும். அதிகப்படியான வெப்பம் முடியில் உள்ள ஈரப்பதத்தை நீக்கி, அதை பலவீனமாகத் தோற்றமளிக்கச் செய்யும். தினமும் கருவிகள் மூலம் அலங்காரம் செய்வதை தவிர்த்துவிடுங்கள்.
அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறை
முடியின் வலிமை என்பது வெளிப்புறம் மட்டுமல்ல, உடலுக்குள்ளும் இருக்கிறது. உங்கள் உடலுக்குப் போதுமான புரதம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கவில்லை (Lack of nutrients) என்றால், அது உங்கள் முடியைப் பாதிக்கலாம். உங்கள் உணவில் பருப்பு வகைகள், முட்டை, பச்சை காய்கறிகள், பழங்கள், விதைகள் மற்றும் கொட்டைகள் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்வது நன்மை தரும்.
மன அழுத்தம், தூக்கத்தைப் புறக்கணிப்பது
இன்றைய வேகமான வாழ்க்கையில் மன அழுத்தமும் தூக்கமின்மையும் பொதுவான பிரச்சனைகளாகிவிட்டன. தொடர்ச்சியான மன அழுத்தம், முடி வளர்ச்சி உட்பட பல உடல் செயல்பாடுகளைச் சீர்குலைக்கக்கூடும். எனவே, மன அழுத்தத்தை குறைத்து போதுமான தூக்கத்தைப் பெறுவதும் மன அழுத்தத்தைக் குறைப்பதும் (sleep reason for hair fall) முக்கியம். விலையுயர்ந்த முடி பராமரிப்பு சிகிச்சைகளை விட, உங்கள் அன்றாடப் பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்துவது முக்கியம். சரியான உணவு, நல்ல தூக்கம், மன அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் முறையான முடி பராமரிப்பு ஆகியவை ஆரோக்கியமான முடியைப் பராமரிக்க உதவும்.
