சீனாவில் ஆன்லைன் விற்பனையின் ஜாம்பவானான அலிபாபா, தனது துணை நிறுவனமான அலிபாபா ஸ்போர்ட்ஸுடன் இணைந்து இம்மாத இறுதியில், சர்வதேச வீடியோ விளையாட்டுப் போட்டியை சீனாவில் நடத்த திட்டமிட்டுள்ளது.
இதற்காக, வீடியோ விளையாட்டுப் போட்டிகளில் அனுபவம் கொண்ட சிங்கப்பூரின் யூசூ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. உலகமெங்கும் உள்ள வீடியோ விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு 55 லட்சம் டாலர் பரிசு என அலிபாபா ஸ்போர்ட்ஸ் அறிவித்துள்ளது. இந்தப் போட்டிகள் இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.