அதிமுக 5 இடங்களில் வெற்றி – எங்கெங்கு?

Published On:

| By Kavi

தற்போது வரை அதிமுக ஐந்து இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

செய்யூர், செய்யாறு, வேதாரண்யம், நன்னிலம், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

ADVERTISEMENT

இதில் செய்யூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜசேகர் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மோகன் ராஜாவை 5,668 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

செய்யாறு தொகுதியில் முக்கூர் சுப்பிரமணியன் தமிழக வெற்றி கழக வேட்பாளர் தூசி மோகனை 21, 081 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

ADVERTISEMENT

வேதாரண்யத்தில் ஓ எஸ் மணியன் திமுக வேட்பாளர் புகழேந்தியை 51,841 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

நன்னிலத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் திமுக வேட்பாளர் முகமது முபாரக்கை 41 ஆயிரத்து 724 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

ADVERTISEMENT

அம்பாசமுத்திரத்தில் இசக்கி சுப்பையா காங்கிரஸ் வேட்பாளர் துரையை 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share