அதிமுக அலுவலகம் : உச்ச நீதிமன்றத்தை நாடிய பன்னீர்

Published On:

| By Kavi

அதிமுகவுக்குள் தற்போது சட்டப்போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இதில் ஈபிஎஸ் தரப்புக்கு ஆதரவாகவே நீதிமன்ற தீர்ப்பு அமையும் நிலையில், அதனை எதிர்த்து பன்னீர் செல்வம் மேல்முறையீடு செய்து வருகிறார். அந்தவகையில் தற்போது ஈபிஎஸ் தரப்பிடம் அதிமுக அலுவலகம் ஒப்படைக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

அலுவலகத்துக்குச் சீல்!

ADVERTISEMENT

கடந்த ஜூலை 11ஆம் தேதி வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற்ற நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் சென்றார் ஓ.பன்னீர் செல்வம். அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். அலுவலகம் வெளியே பன்னீர் ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி ஆதரவாளர்களுக்கும் மோதல், தாக்குதல் என அந்த பகுதியில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் காவல்துறையினரும், வருவாய்த் துறையினரும் தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.


ஈபிஎஸ் வழக்கும் – உத்தரவும்!
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜூலை 20ஆம் தேதி தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கவும், ஒரு மாத காலம் கட்சி நிர்வாகிகள் தொண்டர்களை அலுவலகத்துக்குள் அனுமதிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
ஓபிஎஸ் மேல்முறையீடு
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி ஈபிஎஸ் தரப்புக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முறையீடு செய்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்துக்கே திருப்பி அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா

ADVERTISEMENT

எடப்பாடி டெண்டர் வழக்கு: என்ன சொல்கிறார் ஆர்.எஸ்.பாரதி

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share