நெருங்கும் அக்னி நட்சத்திரம்… கொளுத்தப்போகும் வெயில்!

Published On:

| By Kavi

Agni Natchathiram Start and End Date 2025

கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் வரும் மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ளது. 

அறிவியல் ரீதியாக பூமத்திய ரேகைக்கும், கடக ரேகைக்கும் இடையே சூரியன் பயணம் செய்யும் காலம் அக்னி நட்சத்திரம் என்றும், அக்னி நட்சத்திர காலத்தில் சந்திரன் மட்டுமல்ல பூமியும் சூரியனுக்கு அருகில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

ADVERTISEMENT

அதன்படி இந்த ஆண்டு மே 4ஆம் தேதி முதல்  மே 28ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கொளுத்தும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். 

எனினும் அதற்கு முன்னரே தமிழகத்தில் பல இடங்களில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. Agni Natchathiram Start and End Date 2025

ADVERTISEMENT

அதிகபட்சமாக வேலூரில் நேற்று 40.2° செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. 

இந்நிலையில்,  இன்று முதல் மே 2ஆம் தேதி வரை  தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஒரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

ADVERTISEMENT

அதுபோன்று,  குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன்காரணமாக தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. Agni Natchathiram Start and End Date 2025

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share