“ஒழுக்கம் கத்துக்கிட்டு வாங்க” : செய்தியாளர்களை மிரட்டிய ஏடிஎஸ்பி!

Published On:

| By Kavi

தூத்துக்குடியில் போலீசாருக்கும் பத்திரிகையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக இன்று (ஜூலை 20) கைது செய்யப்பட்டார். 

ADVERTISEMENT

தொடர்ந்து, தூத்துக்குடி எஸ்.பி அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.  9 மணி நேர விசாரணைக்கு பின்னர் மாலை மருத்துவ பரிசோதனைக்காக  தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

இந்நிலையில், செய்தி சேகரிப்பதற்காக செய்தியாளர்கள் மருத்துவமனைக்கு வெளியே திரண்டிருந்தனர். 

ADVERTISEMENT

அப்போது செய்தியாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  ஏடிஎஸ்பி  திபு பத்திரிகையாளர்களிடம் கடுமையாக பேசியுள்ளார். 

குறிப்பாக ரிப்போட்டர்களா.. ரவுடிகளா.. வாங்கடா… வாங்கடா… என்று  கூறி நாக்கைத் துருத்தி, கைகளைக் காட்டி மிரட்டியிருக்கிறார். இதனால் கோபமடைந்த பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். 

ADVERTISEMENT

இதற்கு ஏடிஎஸ்பி, ”ரிப்போர்ட்டர்கள் எப்படி ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டு வாருங்கள்” என்று கூற, ”எப்படி ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்” என பத்திரிகையாளர்கள் பதிலளித்துள்ளனர். 

அப்போது அங்கிருந்த சக போலீசார் ஏடிஎஸ்பியை சமாதானப்படுத்தி ஜீப்பில் அனுப்பி வைத்துள்ளனர்.  

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share