2026 FIFA World Cup Final: ஃபிஃபா உலகக் கோப்பை வென்ற ஸ்பெயினுக்கு பரிசுத் தொகை எவ்வளவு?

Published On:

| By Mathi

2026 FIFA World Cup Final

ஃபிஃபா உலகக் கோப்பை (2026 FIFA World Cup) 2026-ன் சாம்பியனாக மகுடம் சூடிய ஸ்பெயின் அணிக்கு கால்பந்து வரலாற்றிலேயே மிக அதிகப்படியான பரிசுத்தொகையான 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை- ரூ481 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. -வது இடம் பெற்ற அர்ஜென்டினா அணிக்கு ரூ321 கோடியும் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது

அமெரிக்காவின் மெட்லைஃப் மைதானத்தில் இன்று நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஜாம்பவான் அணியான அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை வென்றது ஸ்பெயின்.

ADVERTISEMENT

2010-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் 16 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வாகை சூடியுள்ளது.

பரிசுத் தொகை எவ்வளவு?

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில்
1982-ல் வென்ற இத்தாலி அணிக்கு ரூ. 21.1 கோடியும், 1986-ல் அர்ஜென்டினாவுக்கு ரூ. 26.9 கோடியும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 1990-ல் ஜெர்மனிக்கு ரூ. 33.6 கோடியும், 1994-ல் பிரேசில் அணிக்கு ரூ. 38.5 கோடியும் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

1998-ஆம் ஆண்டு பிரான்ஸ் அணி ரூ. 57.7 கோடியையும், 2002-ல் பிரேசில் அணி ரூ. 77 கோடியையும் பரிசுத்தொகையாகப் பெற்றன. 2006-ல் இத்தாலி அணிக்கு ரூ. 192.5 கோடியும், 2010-ல் ஸ்பெயின் அணிக்கு ரூ. 288.8 கோடியும் வழங்கப்பட்டன.

அடுத்தடுத்த ஆண்டுகளில், 2014-ல் ஜெர்மனி அணி ரூ. 336.9 கோடியையும், 2018-ல் பிரான்ஸ் அணி ரூ. 365.8 கோடியையும் வென்றன. 2022-ல் அர்ஜென்டினா அணிக்கு ரூ. 404.3 கோடி வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
  • தற்போது கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு ரூ.481 கோடியும்
  • 2-வது இடம் பெற்ற அர்ஜென்டினா அணிக்கு ரூ321 கோடியும் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
  • 3-வது இடத்துக்கு ரூ. 283 கோடி
  • 4-வது இடத்துக்கு ரூ. 264 கோடி
  • 5 முதல் 8-ம் இடத்துக்கு ரூ.189 கோடி
  • 9 முதல் 16-வது இடத்துக்கு ரூ. 151 கோடி ரூபாய்
  • 17 முதல் 32-வது இடத்துக்கு ரூ.114 கோடி ரூபாய்
  • 33 முதல் 48-வது இடத்துக்கு ரூ.95 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share