சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தாளை முன்னிட்டு அவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்தின் 73வது பிறந்தநாள் இன்று (டிசம்பர் 12). இதனை முன்னிட்டு இன்று நள்ளிரவு 12 மணி முதலே திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர், இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ பிரார்த்தனை செய்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் துல்கர் சல்மான், பிரசன்னா, ராகவா லாரன்ஸ், இயக்குநர் நெல்சன், தனுஷ் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் சமூகவலைதளங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மோனிஷா