பாண்ட்ஸ் பவுடர் கூட வாங்க வழியில்லை : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

படிக்காதவன்

ADVERTISEMENT

சண்டேவுக்கு முன்னாடி
எப்படா சண்டே வரும்னு நினைக்கிறவனும்
சண்டேவுக்கு அப்புறம்
அதுக்குள்ள சண்டே போயிடுச்சானு நினைக்கிறவனும்தாண்டா உண்மையான இளந்தாரிபய…

அண்ணாச்சி

ADVERTISEMENT

ராஜினாமா செய்ய முடியாது.. வைகோவுக்கு மதிமுக எம்.எல்.ஏ. பகிரங்க எதிர்ப்பு!
-வச்சாம்..பாரு ஆப்பு..!!

கோவிந்தராஜ்

ADVERTISEMENT

எவ்வளவு மெச்சுரிட்டி வந்தாலும், பேக்கரி போனா பக்கோடாவ எடுத்து சாப்பிடாம இருக்க முடியல கோபி

amudu

வருவாய் குறைவான மாதங்களில் தான், செலவு அதிகரிக்கும் என்பதும் ஒரு வகையான நியூட்டன் விதியே.

Writer SJB

நீங்கள் சிறப்பாக வாழ வேண்டுமென்றால் யாரிடமும் ஏமாறாமல் வாழுங்கள்

நீங்கள் மிகவும் சிறப்பாக வாழ வேண்டுமென்றால் யாரையும் ஏமாற்றாமல் வாழுங்கள்..!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

Blast
தம்பி.. ஒரு மனுசன் பொய் பேசலாம், ஆனா ஏக்கரா கணக்குல பேச கூடாது..

Caroline

உங்களுக்காக என்ன கொண்டு வந்துருக்கேன் பாருங்க..
Atm card ah
அதான் இல்ல.. இப்போ இதுக்கு பெயர் மாத்திரையை பொடி செய்யும் நவீன மிஷின்.

பரமசிவம் ராமசாமி

நானே, கரண்ட் இல்லாம
மெழுகுவர்த்தி வெளிச்சத்துல சமைச்சு சாப்பிட்டுட்டு இருக்கேன்!!

எங்கிட்ட வந்து,என்ன !? “கேண்டில் லைட்” டின்னரானு !?
கேட்கிறான் தம்பி!;??

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share