மறைந்த திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் (வயது 73) இன்று காலை திடீர் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு திரை உலகத்தையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பாக்யராஜ் உடலுக்கு திரை உலகத்தினர் பெருந்திரளாக திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக மூத்த தலைவர்கள், பாக்யராஜ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், பாக்யராஜ் இல்லத்துக்கு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக பாக்யராஜ் இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.
