நடிகர் அஜித் குமார் (Actor Ajith Kumar) தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் (CM Vijay) நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். முதல்வர் விஜய்யுடன் நடிகை திரிஷாவும் சென்றார்.
நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (85) நேற்று அதிகாலை சென்னையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள். திரையுலகத்தினர் மற்றும் அஜித் குமார் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
முதல்வர் விஜய் (CM VIJAY), நடிகை திரிஷா அஞ்சலி
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித் குமார் இல்லத்துக்கு நேற்று இரவு முதல்வர் விஜய் நேரில் சென்று மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார். முதல்வர் விஜய்யுடன் நடிகை திரிஷாவும் சென்றார்.
முன்னதாக முதல்வர் விஜய் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “அருமை நண்பர் அஜித் குமார் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.
