சீருடை பணியாளர் தேர்வாணைய வாரிய தலைவரான ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் என்பது சீருடை பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சுனில்குமார் கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார்.
1988 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சுனில்குமார் கடந்த 2021 ஆம் ஆண்டு சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவில் டி.ஜி.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன்பின் சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அதுபோன்று தமிழ்நாடு தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அபய்குமார் சிங் கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். தற்போது அவரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஏற்கனவே தீயணைப்பு ஆணைய தலைவராக இருந்த சங்கர் ஜிவாலும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய அரசு பொறுப்பேற்றிருக்கும் நிலையில், வாரியத் தலைவர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர். இந்தசூழலில் தற்போதைய அரசு புதிய தலைவர்களை நியமிக்கும் என தகவல்கள் வருகின்றன.
