சிபிஎம் சண்முகத்தை சட்டசபையில் விமர்சித்த ஆதவ் அர்ஜூனா!

Published On:

| By Mathi

Aadhav Arjuna Criticizes CPM Shanmugam

தவெக அரசுக்கு ஆதரவு தரும் சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகத்தை சட்டசபையில் பொதுப் பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விமர்சித்தார்.

தமிழக சட்டசபையில் இன்று (செப்டம்பர் 8), சர்க்காரியா ஆணையம், மிசா பற்றிய முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிராக திமுக கொறடாவான முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசினார். சபை மரபுகளை விதிகளை மீறிய முதல்வர் விஜய் பேச்சை சபைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று எ.வ.வேலு வலியுறுத்தினார்.

ADVERTISEMENT

இதற்கு பதிலளிக்க எழுந்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுகவை பற்றி பேசும் போது திடீரென, “இன்றைக்கு கூட மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய நம்முடைய தோழர் சண்முகம் ஐயா, முதல்வரின் பதிவை தவறான பார்வையில் புரிந்து கொண்டுள்ளார். அதற்கு ஒரு விளக்கம் தர வேண்டும்” என்றார்.

சிபிஎம் சண்முகம் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில், “அவசர நிலை காலத்தில் இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மிகப்பெரிய போராட்டங்களும் அதன் காரணமாக அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் நடந்தது நாடறிந்த வரலாறு. ஆனால் அவசரநிலை காலத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டது. உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. அதை முதலமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்” என கூறியிருந்தார். இதனை சுட்டிக்காட்டி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சட்டசபையில் இன்று பெ.சண்முகத்தை விமர்சித்தார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share