“வார்த்தையைத் திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை” என்று ஆ.ராசா கூறியுள்ளார்.
சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் மிசா சட்டம் மற்றும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பற்றி பேசியது கண்டனங்களை குவித்தது.
இந்தநிலையில் முதல்வர் விஜய்யை கண்டித்து நேற்று (செப்டம்பர் 12) தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சைதாப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் திமுக எம்.பி.யும் துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா கலந்துகொண்டு பேசினார். அமைச்சர் நிர்மல் குமாரை கடுமையாக விமர்சித்து பேசிய நிலையில் அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில், ”கடமை,கண்ணியம், கட்டுப்பாடு முழக்கத்தை முன் வைத்த திமுக இப்போது வன்மம், வெறுப்பு மற்றும் ஆற்றாமையால் நிரம்பிக்கொண்டு இருக்கிறதோ என அய்யம் எழுகிறது.
திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் மட்டுமல்ல; முன்னாள் ஒன்றிய அமைச்சராகவும் பணி ஆற்றியவர் அண்ணன் ஆ.ராசா
இந்து அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் அண்ணன் சேகர் பாபு ஆகிய இருவரின் இந்த உரையை கேட்டால் அந்த ஆற்றாமை புரியும்.
“எனக்கு சந்தேகம் இருக்கு நீ யாருக்கு பிறந்த?” என கேட்பது பெண்களை இழிவுபடுத்துவது ஆகாதா? அதனால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், ஆ.ராசா அந்த கேள்வி எழுப்பும் போது எந்தவித அசைவும் இல்லாமல் தலை கவிழ்ந்தவாறு இருப்பார்.
முதல்வரை ஓடுகாலி என சேகர்பாபு உளறியதை ‘பீப்’போட்டு அவமானத்தை மறைக்கிறது கலைஞர் தொலைக்காட்சி.
திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி அவர்கள் குறித்து பாஜகவை சார்ந்த திரு.எச்.ராஜாவும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமானும் மிக இழிவாக பேசிய போது, கண்டித்த விடுதலைச் சிறுத்தைகள் இப்போது, திமுக பேச்சாளர்களின் இந்த இழிவான உரையை கண்டிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில், ”திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது.
திமுக தலைவர்களில் சிலர் தொடர்ந்து பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதும் அதைக் கேட்டு தொண்டர்கள் ஆர்ப்பரிப்பதும் சகிக்க முடியவில்லை. அமைச்சர் நிர்மல் குமார் பேசியதை கண்டியுங்கள். அவருடைய தாயாரை இழிவு படுத்துவதை எப்படி திமுக தலைவர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
பொதுவெளியில் பெண்களை இழிவு படுத்தி பேசுபவர் யாராக இருந்தாலும் அந்தந்த கட்சி தலைமை கண்டிக்கவும், ஒழுங்குபடுத்தவும் முன்வர வேண்டும்.
சில திமுகவினர் “கண்ணியம்” தவறுவது தொடர்கிறது. “கட்டுப்பாடு” நிலை நிறுத்தும் “கடமை”யை திமுக. தலைவர் செய்வார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், ”யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தசூழலில் ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில், ”தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் ‘அடையாளத்தை’ – உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில்
கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்.
என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத் தயக்கமில்லை. நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” என்று
