குல்பி ஐஸ் சாப்பிட்ட 85 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

Published On:

| By christopher

85 school children affected by kulfi ice: seller arrested

குல்பி ஐஸ் சாப்பிட்டு வாந்தி மயக்கத்தால் 85 குழந்தைகள் பாதிக்கப்பட்ட நிலையில், அதனை விற்பனை செய்த நபரை போலீஸார் இன்று (ஆகஸ்ட் 19) கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட முட்டத்தூர் கிராமம் உள்ளது. அங்குள்ள அரசு பள்ளி அருகே நேற்று மாலை பைக்கில் வந்த மர்மநபர் ஒருவர் குல்பி  ஐஸ் விற்றுள்ளார்.

பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற சிறுவர், சிறுமிகள்  அவரிடம்  ஆசையாக குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இரவு 10 மணி அளவில் ஐஸ் சாப்பிட்ட அனைத்து சிறுவர்களுக்கும் திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் அடுத்தடுத்து சிறுவர்கள் மயங்கி விழுந்தனர். இதனால் பதறிப்போன பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை உடனடியாக சிறுவர்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு 3 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட மொத்தம் 40 சிறுவர்கள் உள்பட 85 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து குல்பி ஐஸ் விற்ற நபரை கைது செய்ய வேண்டும் என்று  குழந்தைகளின் பெற்றோர் வலியுறுத்திய நிலையில், ஏழுசெம்பொன் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரை கஞ்சனூர் போலீஸார் இன்று காலை கைது செய்துள்ளனர்.

அவரிடம் குல்பி ஐஸில் ஏதேனும் மயக்க மருந்து கலக்கப்பட்டதா அல்லது கெட்டு போன ஐஸை வேண்டுமென்றே குழந்தைகளுக்கு விற்பனை செய்தாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

15 வருட கிரிக்கெட் வாழ்க்கை: கோலி ஓடிய மொத்த தூரம் எவ்வளவு?

ஆளுக்கு ரூ.1000… அதிமுகவை கபளீகரம் ஆக்கும் எடப்பாடி: டிடிவி கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share