அதிமுக மாநாட்டிற்காக ரூ.250 கோடி செலவு செய்வதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நேற்று (ஆகஸ்ட் 18) திருச்சி – கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தாஜ் திருமண மஹாலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ”ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது ஈட்டிய செல்வத்தை கொண்டு மக்களை அள்ளி செல்லலாம் என்று நினைக்கிறார்கள். மதுரை மாநாட்டிற்காக ரூ.250 கோடிக்கும் மேல் செலவு செய்கிறார்கள். அதிமுக மாநாட்டிற்கு மக்கள் செல்வார்களா என்று தெரியாது.
அனைத்து பகுதிகளிலிருந்தும் ஒரு ஆளுக்கு ரூ.1000 தருவதாகவும் இலவச பொருட்கள் தருவதாகவும் அழைத்துள்ளனர். மக்கள் தானாக கூடாத வரையில் வெற்றியை தராது. அதிமுகவை எடப்பாடி கபளீகரம் செய்து விட்டார்.
வரும்காலத்தில் அதிமுகவை ஜனநாயக முறையில் மீட்டெடுப்போம். அதிமுக பொதுச்செயலாளர் என்று நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்துள்ளார். அதனால் அவர் எங்களுடன் இணைந்து பயணிப்பது இயலாத காரியம். 2026-ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவை வீழ்த்துவதற்கு அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள். திருச்சி கூட்டம் இரண்டு மாதங்களுக்கு முன்பாக முடிவு செய்யப்பட்டது. இதனையும் அதிமுக மாநாட்டையும் ஒப்பிட்டு பேசக்கூடாது.” என்று டிடிவி தினகரன் பேசியுள்ளார்.
செல்வம்
INDvsIRE: அயர்லாந்துக்கு பும்ரா கொடுத்த அதிர்ச்சி!
சென்னையில் ரூ.45 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்: இருவர் கைது!
தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்வதா? – ஓபிஎஸ் காட்டம்!
bahis siteleri isimleri [url=http://casinositeleri2025.pro/#]oyun inceleme siteleri[/url] slot bonus
casino gГјncel giriЕџ [url=http://casinositeleri2025.pro/#]yurt dД±ЕџД± bahis sitesi[/url] en Г§ok freespin veren slot 2025
пин ап вход: пин ап зеркало – пин ап казино официальный сайт
пин ап вход: пин ап казино официальный сайт – пин ап казино официальный сайт