இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 24 மணிநேரத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். 7 Deaths in a Single Day Due to COVID-19
இந்தியாவில் பல மாநிலங்களில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் நேற்று மேலும் 276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த ஜனவரி1-ந் தேதி முதல் தற்போது வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,302 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 3281 பேர் மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

அதேபோல நேற்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 44 ஆகவும் உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு, டெல்லி, குஜராத், மத்திய பிரதேசம் மாநிலங்களில் நேற்று கொரோனா இறப்பு பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
