தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 55 ias officers transfer in tamilnadu
இதுதொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் இன்று (ஜூன் 23) பிறப்பித்துள்ள உத்தரவின் படி,
ஒன்றிய அரசு பணியில் இருக்கும் ராஜேந்திர ரத்னூ, முதன்மைச் செயலாளர் /உறுப்பினர் செயலர், சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை (CRRT) மற்றும்சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவன மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் மதுசூதன ரெட்டி, நகராட்சி நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
கூடுதல் தலைமை செயலராக இருந்த விஜயகுமார் நிலச்சீர்த்திருத்த ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு ஆட்சியர் அருண் ராஜ் பெரம்பலூர் ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். செங்கல்பட்டு ஆட்சியராக சினேகா நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் ஆட்சியராக நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன், திருச்சி மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி வட்டார துணை ஆணையர் பிரவீன் குமார், மதுரை மாவட்ட ஆட்சியராகவும்
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும்,
ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி, ஈரோடு ஆட்சியராகவும்,
சேலம், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவன மேலாண்மை இயக்குநர் துர்கா மூர்த்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியராகவும்,
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையத்தின் இணை மேலாண்மை இயக்குநர் பொற்கொடி, சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும்,
சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித், திருப்பூர் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தமாக 9 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ள்னர்.