இளைஞர்களுக்கு ஜாக்பாட் :  50,000 பணியிடங்கள் – சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்!

Published On:

| By Kavi

The Rise, GiveLife, THREPI அறக்கட்டளைகள் இணைந்து சென்னை லயோலா கல்லூரி மற்றும் சென்னையின் மனிதவள அமைப்புகளின் ஆதரவுடன் வரும் ஜூலை மாதம் 11ஆம் தேதி சனிக்கிழமை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்துள்ளது.

இம்முகாமில் 550-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளுடன் பங்கேற்கின்றன.

ADVERTISEMENT

எந்தெந்த துறைகள்?

உற்பத்தி துறை (Manufacturing) சார்ந்து மட்டுமே 200-க்கும் அதிகமான நிறுவனங்களும், ஐ.டி (IT & ITES) துறை சார்ந்து சுமார் 90 நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

வங்கி – நிதி சார் துறைகள், மருத்துவம் – மருந்து பொருட்கள் உற்பத்தி துறை, கல்வி – பயிற்சி துறைகள், சந்தைப்படுத்தல் – விற்பனையாளர்கள் என பல்வேறு துறைகளிலிருந்தும் நிறுவனங்கள் பங்கு பெறுகின்றன.

ADVERTISEMENT

ஜூலை 11 வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளன்றே குறைந்தபட்சம் 25,000 – பேருக்கேனும் வேலை நியமன ஆணை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வகையில் இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாமாக இது அமையும் எனவும் மதிப்பீடு செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share