40 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்! 14 மாவட்ட ஆட்சியர்கள் கூண்டோடு மாற்றம்!

Published On:

| By Mathi

38 ias officers transfer 38 ias officers transfer

தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் (Collectors) உட்பட 30-க்கும் மேற்பட்டஐ.ஏ.ஏ.ஸ் அதிகாரிகள் (IAS officers) கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் விவரம் (IAS)

  1. ஏ.கே. கமல் கிஷோர், இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: நிதித்துறை இணைச் செயலாளர்
    முந்தைய பொறுப்பு: தென்காசி மாவட்ட ஆட்சியர்
  2. எம்.எஸ். பிரசாந்த், இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: நிதித்துறை இணைச் செயலாளர்
    முந்தைய பொறுப்பு: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்
  3. ஆர். அழகுமீனா, இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துணைச் செயலாளர்
    முந்தைய பொறுப்பு: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்
  4. பூஜா குல்கர்னி, இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர்
    முந்தைய பொறுப்பு: தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி
  5. வி. அமுதவல்லி, இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: ஊரக வளர்ச்சித்துறை ஆணையர்
    முந்தைய பொறுப்பு: கைத்தறி, கைவினைப்பொருட்கள், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசுச் செயலாளர்
  6. பி. பொன்னையா, இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: கல்லூரி கல்வித்துறை ஆணையர்
    முந்தைய பொறுப்பு: ஊரக வளர்ச்சித்துறை ஆணையர்
  7. டாக்டர் டி.ஜி. வினய், இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்
    முந்தைய பொறுப்பு: தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண் இயக்குநர்
  8. ஆர். கண்ணன், இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: சர்க்கரைத்துறை ஆணையர் (தமிழ்நாடு நீர்வடிநில மேம்பாட்டு முகமையின் துணைத் தலைவர் / மேலாண் இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார்)
    முந்தைய பொறுப்பு: தமிழ்நாடு நீர்வடிநில மேம்பாட்டு முகமையின் துணைத் தலைவர் / மேலாண் இயக்குநர்
  9. சந்திர சேகர் சாகமூரி, இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர்
    முந்தைய பொறுப்பு: சென்னை பெருநகர வளர்ச்சி முகமையின் (CMDA) தலைமைச் செயல் அதிகாரி
  10. டாக்டர் எஸ். உமா, இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டத்தின் திட்ட இயக்குநர்
    முந்தைய பொறுப்பு: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் செயலாளர்
  11. பி. பிரியங்கா, இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: பேரூராட்சிகள் துறை இயக்குநர்
    முந்தைய பொறுப்பு: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்
  12. பி. ஆகாஷ், இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: மதுரை மாவட்ட ஆட்சியர்
    முந்தைய பொறுப்பு: நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்
  13. கே.ஜே. பிரவீன் குமார், இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்
    முந்தைய பொறுப்பு: மதுரை மாவட்ட ஆட்சியர்
  14. டாக்டர் ஆர். வைத்திநாதன், இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: தேனி மாவட்ட ஆட்சியர்
    முந்தைய பொறுப்பு: செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் / தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை இணைச் செயலாளர் மற்றும் அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு)
  15. வி. சரவணன், இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: தருமபுரி மாவட்ட ஆட்சியர்
    முந்தைய பொறுப்பு: திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர்
  16. எம். பிரதாப், இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்
    முந்தைய பொறுப்பு: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்
  17. பிரதீக் தயாள், இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர்
    முந்தைய பொறுப்பு: நிதித்துறை இணைச் செயலாளர்
  18. வந்தனா கார்க், இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்
    முந்தைய பொறுப்பு: விடுமுறையிலிருந்து திரும்பியவர் (On return from leave)
  19. ஜே.இ. பத்மஜா, இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு:
    கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்
    முந்தைய பொறுப்பு: விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்
  20. என். பிரியா, இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்
    முந்தைய பொறுப்பு: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண் இயக்குநர் / திட்ட இயக்குநர் (உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி திட்டங்கள்)
  21. எல். மதுபாலன், இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு:
    நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
    முந்தைய பொறுப்பு: திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர்
  22. ஆனந்த் மோகன், இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்
    முந்தைய பொறுப்பு: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநர்
  23. பி.எஸ். லீலா அலெக்ஸ், இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: வேலூர் மாவட்ட ஆட்சியர்
    முந்தைய பொறுப்பு: சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் உறுப்பினர் செயலர் மற்றும் சென்னை நதிகள் உருமாற்ற நிறுவனத்தின் மேலாண் இயக்குநர்
  24. ஆர். ரேவதி, இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்
    முந்தைய பொறுப்பு: உயர்கல்வித்துறை துணைச் செயலாளர்
  25. டாக்டர் எம். வீரப்பன், இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்
    முந்தைய பொறுப்பு: கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர்
  26. கே. பாலசுப்பிரமணியம், இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை இயக்குநர்
    முந்தைய பொறுப்பு: பொது மற்றும் மறுவாழ்வுத்துறை கூடுதல் செயலாளர்
  27. கே. தர்ப்பகராஜ், இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர்
    முந்தைய பொறுப்பு: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்
  28. ஆர். சதீஷ், இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: வெளிநாடு வாழ் தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நலத்துறை இயக்குநர்
    முந்தைய பொறுப்பு: தருமபுரி மாவட்ட ஆட்சியர்
  29. மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் (POWERFIN) தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்
    முந்தைய பொறுப்பு: பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்
  30. ஜே. ஜெயகாந்தன், இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்
    முந்தைய பொறுப்பு: நீர்வளத்துறை அரசுச் செயலாளர்
  31. இ. சரவணவேல்ராஜ், இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் (TAMIN) மேலாண் இயக்குநர் (சேலம், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார்)
    முந்தைய பொறுப்பு: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசுச் செயலாளர்
  32. பி.என். ஸ்ரீதர், இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண் இயக்குநர்
    முந்தைய பொறுப்பு: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்
  33. எஸ்.பி. கார்த்திகா, இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: சென்னை பெருநகர வளர்ச்சி முகமையின் (CMDA) தலைமைச் செயல் அதிகாரி
    முந்தைய பொறுப்பு: மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர்
  34. ஆர்.வி. ஷஜீவனா, இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண் இயக்குநர்
    முந்தைய பொறுப்பு: தமிழ்நாடு ஊரக உருமாற்றத் திட்டத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி மற்றும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் திட்ட இயக்குநர் (கூடுதல் பொறுப்பு)
  35. சிம்ரன்ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் உறுப்பினர் செயலர் (தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார்)
    முந்தைய பொறுப்பு: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்
  36. பி. கணேசன், இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநர்
    முந்தைய பொறுப்பு: நகர் ஊரமைப்புத் துறை இயக்குநர்
  37. ரஞ்சித் சிங், இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன மேலாண் இயக்குநர்
    முந்தைய பொறுப்பு: தேனி மாவட்ட ஆட்சியர்
  38. வி.ஆர். சுப்புலட்சுமி, இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: தமிழ்நாடு ஊரக உருமாற்றத் திட்டத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் திட்ட இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார்)
    முந்தைய பொறுப்பு: வேலூர் மாவட்ட ஆட்சியர்
  39. இ. சுந்தரவல்லி, இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சிறப்புச் செயலாளர்
    முந்தைய பொறுப்பு: கல்லூரி கல்வித்துறை ஆணையர்
  40. ஆர். லலிதா, இ.ஆ.ப.
    மாற்றப்பட்டுள்ள பொறுப்பு: நிதித்துறை அரசுச் செயலாளர் (செலவினம்)
    முந்தைய பொறுப்பு: புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர்

14 புதிய மாவட்ட ஆட்சியர்கள் (COLLECTORS)

தமிழக அரசு அறிவித்துள்ள மாற்றங்களின் படி மாவட்ட ஆட்சியர்கள் விவரம்:

ADVERTISEMENT
  1. பி. ஆகாஷ், இ.ஆ.ப. – மதுரை மாவட்ட ஆட்சியர்
  2. கே.ஜே. பிரவீன் குமார், இ.ஆ.ப. – நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்
  3. டாக்டர் ஆர். வைத்திநாதன், இ.ஆ.ப. – தேனி மாவட்ட ஆட்சியர்
  4. வி. சரவணன், இ.ஆ.ப. – தருமபுரி மாவட்ட ஆட்சியர்
  5. எம். பிரதாப், இ.ஆ.ப. – கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்
  6. பிரதீக் தயாள், இ.ஆ.ப. – திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர்
  7. வந்தனா கார்க், இ.ஆ.ப. – திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்
  8. ஜே.இ. பத்மஜா, இ.ஆ.ப. – கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்
  9. என். பிரியா, இ.ஆ.ப. – இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்
  10. எல். மதுபாலன், இ.ஆ.ப. – நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
  11. ஆனந்த் மோகன், இ.ஆ.ப. – திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்
  12. பி.எஸ். லீலா அலெக்ஸ், இ.ஆ.ப. – வேலூர் மாவட்ட ஆட்சியர்
  13. ஆர். ரேவதி, இ.ஆ.ப. – தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்
  14. டாக்டர் எம். வீரப்பன், இ.ஆ.ப. – செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்

Photo of author
Mathi

நான் 1993-ம் ஆண்டு முதல் இதழியல் துறையில் பணிபுரிகிறேன். அச்சு, இணையம், காட்சி, ஒலி என அனைத்து ஊடகத் துறையிலும் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. தமிழின் பழம் பெரும் நாளேடான தினமணியில் செய்தியாளராக பணியை தொடங்கினேன். உலகின் முதல் தமிழ் செய்தி இணையதளமான தற்போது பயன்பாட்டில் இல்லாத ‘இன்தாம்’ இணையத்தில் செய்திப் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினேன். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தமிழ் வானொலியின் இந்திய பொறுப்பாளராக, சன் நியூஸ் செய்தி சேனலில் சிறப்பு தொகுப்பு ஆசிரியராக, ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் இணை ஆசியராக பணிபுரிந்தேன். தற்போது மின்னம்பலத்தில் பணியாற்றுகிறேன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share