முன்பதிவில் ரூ. 30 கோடி: ஜெயிலர் 2 சாதனை படைக்குமா?

Published On:

| By Kavi

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் முன்பதிவில் 30 கோடி ரூபாய் வரை வசூலை எட்டி இருப்பதாக தகவல்கள் வருகின்றன. 

ஜெயிலர் 1 வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் வரும் அக்டோபர் 15ம் தேதி வெளியாகிறது.

ADVERTISEMENT

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்திரன் இசையில் சன் பிக்சர் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது. 

ஃபிலிம் பிட் வெளியிட்ட தகவல் படி, ஜெயிலர் 2 திரைப்படத்தின் முன்னணி நடிகர்களின் சம்பளம் சுமார் 240 முதல் 300 கோடி ரூபாய் என்றும் படத்தின் தயாரிப்புச் செலவு 100 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே இருந்தது என்றும் கூறுகிறது.

ADVERTISEMENT

இந்த சூழலில் ஜெயிலர் 2 திரைப்படம் முதல் நாள் உலக அளவிலான முன்பதிவில் 30 கோடி ரூபாய் வரை வசூலை எட்டி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

இதில் வெளிநாட்டு முன்பதிவுகள் மட்டும் 20 கோடி ரூபாயை தாண்டி உள்ளது. 

ADVERTISEMENT

இந்தியாவில் முதல் நாள் காட்சிகளுக்காக மொத்தம் 10 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. 242 நகரங்களில் 771 திரையரங்குகளில் 4,843 காட்சிகளுக்காக சுமார் 5.69 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. 

படம் வெளியாக இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் முன்பதிவு வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோன்று படம் வெளியீட்டுக்கு பின்பு வசூலில் சாதனை படைக்குமா ஜெயிலர் 2 என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share