பிக்பாஸ் முத்துக்குமரன் மீது இன்ஸ்டா பிரபலம் வகீதா பகீர் புகார்!

Published On:

| By Pandeeswari Gurusamy

பிக்பாஸ் வின்னர் முத்துக்குமரன் மீது இன்ஸ்டா பிரபலம் வஹிதா பேகம் வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முத்துக்குமரன் ஜெகதீசன். பட்டிமன்ற பேச்சாளரான இவர், யூடியூபராகவும் இருந்து வருகிறார். ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ நிகழ்ச்சியின் மூலம் கவனம் பெற்ற இவர், பிக்பாஸ் சீசன் 8-ல் தனது பேச்சுத் திறமையால் இறுதிவரை முன்னேறி டைட்டில் வென்றார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பிரபலமான வஹிதா அக்தர் முத்துக்குமரன் மீது முன்வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு சினிமா வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இன்ஸ்டாகிராம் பிரபலமான வஹிதா அக்தார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில். “நான் கடந்த சில நாட்களாக பிரேக்-அப் காரணமாக மனமுடைந்து இருந்தேன். அப்போது சென்னை கத்திப்பாராவில் எதேச்சையாக முத்துக்குமரனை சந்தித்தேன். அவர் கியூட்டாக சில விஷயங்களைச் செய்தார். என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். எனக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது; இருந்தும் அவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக் கொண்டார். பின்னர், அடுத்த நாள் வீட்டிற்குச் சென்றுவிட்டு, அவரிடம் திருமணம் குறித்துப் பேசியபோது அதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து வந்தார். மேலும், தனக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் கூறிவிட்டார்”

மருத்துவமனை அனுமதி:

இந்த அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டதைத் தொடர்ந்து, வஹிதா தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவரது நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் எதிர்பாராத விதமாக நான் மருத்துவமனையில் உயிரோடு இருக்கிறேன். அதனால் கவலைப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போன்ற ஒரு சிறிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டு, தற்போது தான் நலமுடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

வஹிதா அக்தார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்கொலை தொடர்பான வீடியோ மற்றும் பதிவுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே, அந்தப் பதிவுகள் அனைத்தும் திடீரென நீக்கப்பட்டன. மேலும், இதுகுறித்து கேள்வி எழுப்பிய பல பயனர்களை அவர் பிளாக் செய்துவிட்டதாகவும் தகவல்கள் உலா வந்தன.

இதனிடையே, சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட மற்றொரு பதிவில், தமிழ்நாடு காவல்துறையை டேக் செய்து வஹிதாவின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்றும், முத்துக்குமரனிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தற்போது வஹிதா தனது இன்ஸ்டாகிராமில் முத்துக்குமரனுடன் இருக்கும் பழைய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share