2029 மக்களவை தேர்தல் முடிவுகள் தொடர்பாக ‘இந்தியா டுடே’ நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
‘இந்தியா டுடே’ நிறுவனம் தொடர்ந்து ‘Mood of Nation’ என்ற பெயரில் கருத்து கணிப்புகளை நடத்தி வருகிறது.
2029 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கருத்து கணிப்பில் பிரதமர் மோடி- 48.7%; ராகுல் காந்தி- 27.1%; விஜய்- 9.2% ஆதரவு என தெரிவிக்கப்பட்டிருந்தது.
2029 தேர்தலில் எந்த அணிக்கு எவ்வளவு இடம் கிடைக்கும் என்கிற கருத்து கணிப்பின் முடிவுகள்:
பாஜக – 261
காங்கிரஸ் – 106
மற்றவை – 176
மக்களவையில் பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை. ஆனால் 2029 தேர்தலிலும் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்கிறது இந்தியா டுடே சர்வே.
கடந்த 2024 தேர்தலில் பாஜகவுக்கு 240 இடங்கள்தான் கிடைத்தன. தற்போது பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
அதே நேரத்தில் மாநில கட்சிகள் 176 இடங்களைப் பெற்றுள்ளன. இதனால் சில மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்க சாத்தியம் இருக்கிறது.
இன்னொரு பக்கம், காங்கிரஸ் 106 இடங்களையும் மாநிலக் கட்சிகள் 176 இடங்களையும் பெறும் நிலையில் காங்கிரஸும் ’கூட்டணி’ ஆட்சி அமைக்கும் முயற்சிகளை முன்னெடுக்கக் கூடும். அதிகமான இடங்களைக் கைப்பற்றும் மாநில கட்சிகளின் தலைவர் ஒருவரை காங்கிரஸ் பிரதமராக முன்னிறுத்தவும் வாய்ப்புகள் உள்ளன.

இந்தியா டுடே கருத்து கணிப்பு முடிவுகள் இதுவரை:
MOTN ஆகஸ்ட் 2023: பாஜக – 287, காங்கிரஸ் – 74, மாநில கட்சிகள் – 182
MOTN பிப்ரவரி 2024: பாஜக – 304, காங்கிரஸ் – 71, மாநில கட்சிகள் – 168
MOTN ஆகஸ்ட் 2024: பாஜக – 244, காங்கிரஸ் – 106, மாநில கட்சிகள் – 193
MOTN பிப்ரவரி 2025: பாஜக – 281, காங்கிரஸ் – 78, மாநில கட்சிகள் – 184
MOTN ஆகஸ்ட் 2025: பாஜக – 260, காங்கிரஸ் – 97, மாநில கட்சிகள் – 186
MOTN ஜனவரி 2026: பாஜக – 287, காங்கிரஸ் – 80, மாநில கட்சிகள் – 176
MOTN ஆகஸ்ட் 2026: பாஜக – 261, காங்கிரஸ் – 106, மாநில கட்சிகள் – 176
