1,500 முறை வெடிகுண்டு மிரட்டல்.. அமெரிக்கா ‘ரிட்டர்னை’ தூக்கிய போலீஸ்!

Published On:

| By Mathi

1,500 Bomb Threats.. Chennai Police Nab US Returnee

தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள், விமான நிலையம் உள்ளிட்டவைகளுக்கு 1,500 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்தவர் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த சரத் சுப்பிரமணியன் சங்கர். இவர் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டினில் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் சென்னை வந்த சரத் சுப்பிரமணியன் சங்கரை, விமான நிலையத்தில் குடியேற்றத்துறை அதிகாரிகள் கைது செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து சரத் சுப்பிரமணியன் சங்கரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

அரசு அலுவலகங்கள், விமான நிலையம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு டார்க் வெப் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சரத் சுப்பிரமணியன் சங்கர் என்பது குற்றச்சாட்டு. கடந்த 6 மாதங்களாக சரத் கண்காணிக்கப்பட்ட நிலையில் சென்னை திரும்பிய போது கைது செய்யபப்ட்டார். நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சரத் சங்கர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share