சென்னை உயர்நீதிமன்றத்துக்கு (Madras High Court) புதியதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகள் இன்று (ஆகஸ்ட் 9) பதவியேற்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களில் 19 பேரை நியமிக்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பரிந்துரை குழுவான கொலீஜியம் கடந்த மார்ச் மாதம் பரிந்துரை செய்திருந்தது.
இதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் 8 வழக்கறிஞர்கள், 7 நீதித்துறை அதிகாரிகள் என மொத்தம் 15 பேரை நீதிபதிகளாகவும் கூடுதல் நீதிபதிகளாகவும் நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டிருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள்:
- கோவிந்தராஜன் கிருஷ்ணசுவாமி
- ராஜேஷ் பதியியல்
- ரமேஷ் நடராஜன்
- ஜி.கே. முத்துக்குமார்
- ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன்
கூடுதல் நீதிபதிகள்
- ரவிகுமார் சங்கரநாராயணன்
- திலீப் குமார் நாகராஜன்
- எல்லப்பன் மனோகரன்
- டாக்டர் பி. முருகன்
- எம்.டி. சுமதி
- எஸ். அல்லி
- சி. திருமகள்
- சண்முகம் கார்த்திகேயன்
- முருகேசன் பாலுச்சாமி
- என். குணசேகரன்



பதவியேற்பு
இதனைத் தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்தது. தற்போதைய நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடங்களின் காலி எண்ணிக்கை 9 ஆக உள்ளது.
