பரவூர் தேவிகோயில் விபத்து: பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல்காந்தி நேரில் பார்வையிட்டனர்

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், பரவூர் புற்றிங்கல் கோயில் திருவிழாவில், வாணவேடிக்கையின்போது ஒரு வீட்டில் குவித்து வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்தானது. இந்த விபத்தில், அப்பகுதியில் இருந்த 106 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்தத் துயரச் சம்பவம் நாடு முழுவதும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பிரதமர் மோடி விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, இழப்பீடும் அறிவித்தார். பின்னர், இன்று பிற்பகல் விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து சாலை வழியாக கொல்லத்தில் விபத்து நடந்த இடத்துக்குச் சென்று நேரில் பார்வையிட்டார். அப்போது, கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டியும் மோடியுடன் சேர்ந்து விபத்து குறித்து பேசினார். பின்னர், விபத்தில் காயமடந்தவர்களை மருத்துவமனைக்குச் சென்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதனையடுத்து, மாலை 5 மணிக்குமேல், கொல்லம் வந்த காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தி, வெடிவிபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டார். பின்னர், காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel