ஆறு நாள் அரசு முறைப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, முதலீடு தொடர்பாக பல முதலீட்டாளர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து வருகிறார். டோக்கியோவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், ‘இந்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக, இந்தியப் பொருளாதாரம் சில வருடங்களில் 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இரட்டிப்பாக வளர்ச்சி அடையும். மிக வேகமாக வளரும் பொருளாதார நாடு என்பதோடு மட்டுமில்லாது முழுமையடைந்த பொருளாதார நாடாக இருக்கும். இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி மிக வேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக, தற்போது 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இருக்கும் பொருளாதாரமானது, ஒவ்வொரு ஆண்டும் 1 ட்ரில்லியன் டாலர்கள் அதிகரித்து, சில வருடங்களில் 5 ட்ரில்லியன் டாலர்கள் கொண்டதாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சில வருடங்களில் இரட்டிப்பாகும் – அருண் ஜெட்லி
Published On:
| By Balaji
Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
