முதன்முறையாக இந்தியாவில் செயற்கை இதய வால்வுகள்

Published On:

| By Balaji

%இதயத்துக்கு ரத்தத்தை சீரானமுறையில் கொண்டுசெல்ல உதவும் செயற்கை இதய வால்வுகள் இந்தியாவில் முதன்முறையாக தயார் செய்யப்பட்டுள்ளன. மனிதனின் வாழ்நாளை நீட்டிக்கும் மகத்தான பணி மருத்துவம் மூலம் சாத்தியமாகியிருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை, மருத்துவத்துறை வேகமாகவே வளர்ந்து வருகிறது. உலக நாடுகளுக்குச் சவால் விடுக்கும்வகையில் பல நவீன கண்டுபிடிப்புகளை அவ்வப்போது துறைசார்ந்த அறிஞர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். அதேபோல, இதர மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் குறிப்பாக, சென்னையில் மருத்துவ வசதிகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்கா, ஜெர்மனி நாடுகளில் மட்டுமே தயார் செய்யப்பட்டு வந்த செயற்கை இதய வால்வுகள், இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் உள்ள பிரண்டியர் மருத்துவமனையில் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த வால்வுகள் இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச்செல்லும் இடது வெண்ட்ரிகளுக்கு அருகில் பொருத்தப்பட்டு, ரத்தத்தை சீரானமுறையில் இதயத்துக்கு எடுத்துச்செல்ல உதவுகிறது. இதற்கான செலவு ரூபாய் 30 லட்சம் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share