உலகெங்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட ‘இண்டியானா ஜோன்ஸ்’ படங்களின் வரிசையில், மீண்டும் ஒரு படம் உருவாகவிருப்பதாக வால்ட் டிஸ்னி அறிவித்திருக்கிறது. ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில், தொல்லியல் துறை ஆய்வாளராக ஹாரிசன் போர்ட் நடித்து, 1981ம் ஆண்டு இதன் முதல் பாகம் வெளியானது. 19 ஆண்டு இடைவெளிக்குப்பிறகு, இதன் நான்காவது பாகம் 2008ம் ஆண்டு வெளியானது. ஆனால், அதற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இதன் ஐந்தாவது பாகம் மீண்டும் உருவாகவிருப்பதாக வால்ட் டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது 73 வயதாகும் ஹாரிசன் போர்டு இதிலும் நடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் ஜூலை 19, 2019ல் வெளிவரும் என வால்ட் டிஸ்னி அறிவித்துள்ளது.
மீண்டும் ‘இந்தியானா ஜோன்ஸ்’: வால்ட் டிஸ்னி அறிவிப்பு
Published On:
| By Balaji
Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
