மதுரை ஆதீனம் என்பது தமிழகத்தின் பழமையான சைவசமயத் திருமடங்களில் ஒன்றாகும். இது திருஞானசம்பந்தர் ஒழுங்குபடுத்திய மடங்களில் ஒன்றாகும். இந்த மடத்தின் தலைமைப் பதவியில் இருப்பவர் ஆதீனம் என்று அழைக்கப்படுகிறார். தற்போது, ஆதீனமாக இருப்பவர் அருணகிரி என்பவர். பல்வேறு சர்ச்சைகளில் இவரது பெயர் அடிபட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று தனது மடத்தின் இளைய ஆதீனமாக திருநாவுக்கரசு என்பவரது பெயரை அறிவித்திருக்கிறார். 38 வயது நிரம்பிய திருநாவுக்கரசு பிள்ளையார்பட்டியைச் சேர்ந்தவர். இவர், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் தேவஸ்தானத்தில் முறைப்படி சமஸ்கிருதம் பயின்றவர். முன்பு, இதேமடத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தா அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை: இளைய ஆதீனமாக திருநாவுக்கரசு
Published On:
| By Balaji
Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
