தேர்தல் அரசியல் செய்வதற்காக நடக்கும் மாநாட்டில் மதவெறுப்பு மற்றும் மதம்சார்ந்த வன்முறைகளைத் தூண்டிவிடும் போக்கு அதிகரித்துவருவதாக காங்கிடஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜார்க்கண்டில் பசுமாட்டு இறைச்சியை விற்பனை செய்ததாகக்கூறி கால்நடை வியாபாரிகள் இருவர் தூக்கிலிடப்பட்ட சம்பவம்குறித்து கண்டனம் தெரிவித்து அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மத்திய அமைச்சர்கள், பாஜக பிரமுகர்கள், ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவார் அமைப்புகளின் வன்முறையைத்தூண்டும் பேச்சுகளைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதைவைத்து, நாட்டை துண்டாடத் திட்டமிருப்பதாக சந்தேகம் எழுகிறது. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார் என்று தெரிகிறது.
மதச்சார்பின்மையைக் காக்க மோடிக்கு குலாம்நபி ஆசாத் கடிதம்
Published On:
| By Balaji
Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
