நாளை காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் பீட்டர் அல்போன்ஸ்

Published On:

| By Balaji

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியில் இணையவிருப்பதாக தமாகா மூத்த துணைத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார். சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தன்னுடன் முன்னாள் எம்.பி.விசுவநாதன் உள்ளிட்டோரும் காங்கிரஸில் சேர இருப்பதாகக் கூறினார். விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக தன்னால் ஏற்க முடியவில்லை என்று தெரிவித்த பீட்டர் அல்போன்ஸ். மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ செயல்பாட்டில் நம்பிக்கை இல்லை’ என்றார். சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தமக்குக் கிடையாது என்றும் அவர் கூறினார்.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share