பாரதிய ஜனதா கூட்டணியின் 2வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘சென்னை கமலாலயத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக-வின் பிரச்சார வாசகம், ‘தாமரை வெல்லட்டும், தமிழகம் வளரட்டும்’ என்ற வாசகத்தை பாஜக மூத்த தலைவர் முரளிதரராவ் முன்னிலையில் வெளியிட்டுள்ளோம். சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி. தொகுதியைக் குறித்து பாஜக மேலிடம் அறிவிக்கும். திருச்சியில் நடைபெறவிருக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா கலந்துகொள்ள இருக்கிறார் என்று கூறினார்.
நான் போட்டியிடுவது உறுதி: தமிழிசை!
Published On:
| By Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
