தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா உறுதுணை – உலக வங்கி

Published On:

| By Balaji

‘உலகிலேயே மிக வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட பகுதியாக தெற்காசியா விளங்குவதற்கு இந்தியா, உறுதுணையாக இருக்கும்’ என உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடத்துக்கு இருமுறை வெளியாகும் உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையில், ‘தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சி, தற்போது நிலவும் 7.1 சதவிகிதத்திலிருந்து உயர்ந்து 2017-ம் ஆண்டு 7.3 ஆக இருக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முக்கியக் காரணமாக இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவின் 7.5 சதவிகிதமாக உள்ள பொருளாதார வளர்ச்சி, 2017-ம் ஆண்டு 7.7 சதவிகிதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் முதலீடு, உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, தொடர்ந்து உயரும் முதலீட்டுச் சூழ்நிலை, வர்த்தக மற்றும் நிதி நிறுவனங்களின் நிலையான தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பிடப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share